DMK Files 2 தொடர்பான வீடியோவை வெளியிட்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து, திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆவணங்களை DMK files 2 என்ற பெயரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியிடம் பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்படைத்தார்.
ஏற்கனவே, டிஎம்கே பைல்ஸ் 1 என்ற திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை தயாரித்து வீடியோவாக வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது டிஎம்கே பைல்ஸ் 2 என்ற ஊழல் பட்டியலையும் ஆளுநரிடம் அளித்துள்ளதாக கூறப்பட்டது.
ஆளுநரை சந்தித்தபின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இன்று தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்களைச் சந்தித்தோம்.
அப்போது, ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, DMK Files 2 தொடர்பான வீடியோவை வெளியிட்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…