குட்கா வழக்கு: திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் “ரிட்” மனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டில் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸில் சில குறைபாடுகள் உள்ள காரணத்தினால், தற்பொழுது நடவடிக்கை எடுக்கமுடியாது எனவும், மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடியுள்ளது. மேலும், அவர்கள் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பேரவை கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதை தடுக்க இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025