உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது – முதலமைச்சர் பழனிசாமி
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுவிட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின். தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் ஸ்டாலினின் திட்டம்.உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு யார் காரணம் என்பதை ஸ்டாலின் காட்டிவிட்டார் .அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலினின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.மேலும் 20 நாட்களுக்குள் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை குறையும் என்றும் தெரிவித்தார்.