ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக்கு தர வேண்டாம்.. திமுக நிர்வாகிகள் வலியுறுத்தல்.!
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் வேளையில், திமுகவும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது. திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழுவானது தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.
உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில் சிஏஏவை காலூன்ற விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்
இந்த நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்த ஆலோசனை குழுவானது இன்று கடலூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனையை நடத்தியது. இதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஒருமித்த கருத்தை கூறினர்.
அதாவது, இந்த முறை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல் திமுகவிற்கு கொடுங்கள். திமுக வேட்பாளருக்கு தான் இங்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த முறை இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என ஒருமித்த கருத்தை கூறினர்.
திமுக நிர்வாகிகளின் கருத்தை கேட்டுக்கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினர் திமுக ஒருங்கிணைப்பு குழுவினர் கட்சி தலைமையுடன் எடுத்துரைப்பதாகவும் கட்சி தலைமை தான் வேட்பாளர் யார் என இறுதி பட்டியலை வெளியிடுவார்கள் என்றும் கூறியுள்ளனர் .
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட கனி கே.நவாஸ் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.