புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என்றும்,திமுகவை ‘தீய சக்தி கூட்டம்’ என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக கட்சி சார்பில் கோவை மாவட்ட மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று கொடிசியா மைதானத்தில் தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,திமுக கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் பின் பேசிய உதயநிதி அவர்கள்,”கோவையில் சிறப்பான வரவேற்பை பார்க்க முடிந்தது. கடந்த சட்டமனற்ற தேர்தலின்போது இங்கு 2 நாட்கள் தங்கியிருந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.
மேலும்,கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை,சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள்.சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதியில், 5 தொகுதியாவது வெற்றி பெறுவோம் என நினைத்தேன்.ஆனால், ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை, கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறினார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதே சமயம்,ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சிறை செல்வது உறுதி என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில்,புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் அமமுகவினர் அஞ்சலி செலுத்துவதற்கு வழங்கியிருந்த அனுமதியை ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பதை முன்னிட்டு ரத்து செய்வதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில்,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?.
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ?.
இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது,மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! ‘தீய சக்தி கூட்டம்’ என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? “,என்று பதிவிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…