வெளியானது திமுக தேர்தல் அறிக்கை!மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்

Default Image
  • மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று  காலை  வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் -மதிமுக – விசிக – மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.மேலும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.  அதேபோல் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.அதேபோல் மதிமுக,விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் ஐஜேகே  ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று  காலை  வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

Image result for அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின்

 

அதன்படி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றும்  தமிழகத்தின் பொருளாதாரமும் சரிந்துள்ளது என்று பேசினார்.

தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:

  1. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் கொண்டுவர  நடவடிக்கை எடுக்கப்படும்.
  2. மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
  3. தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  4. வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 
  5. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  6. மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும். 
  7. சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
  8. மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  9. சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  10. கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும்.
  11. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும்.
  12. மாணவர்கள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்.
  13. தனி நபர் வருமானத்தை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  14. நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரி கட்டணம் ரத்து செய்யப்படும்.
  15. கேபிள் டிவிக்கு பழைய முறை கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  16. சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பாலியல் ரீதியான சம்பவங்களை தவிர்க்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
  17. கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.
  18. 10ம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும்.
  19. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  20. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கைவிட நடவடிக்கை எடுக்கப்படும்.
  21. 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை வழங்கப்படும்.
  22. இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  23. பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்