திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம் விவரம்.!

2021-சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5ஆம் கட்ட சுற்றுப்பயண மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மார்ச் அல்லது மே மாதம் நடக்கயிருப்பதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பிரதான கட்சியின் ஒன்றான திமுக தேர்தல் அறிக்கையை தனிக்குழு அமைத்து தயாரித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5ஆம் கட்ட சுற்றுப்பயண குறித்து கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டிஆர் பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் தங்கள் மாவட்டங்களை சார்ந்த பொதுநல சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், போன்ற பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுக்கும் உரிய முறையில் அழைப்புகள் அளித்து, அங்குள்ள பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5ஆம் கட்ட சுற்றுப்பயணம் ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறைவடைகிறது. சென்னை வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு என 3 நாள்கள் இப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக காலை நிகழ்ச்சிகள் அனைத்தும் 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும் துவங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘2021-சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம்’#DMKManifesto2021 pic.twitter.com/uVSaUTl6He
— DMK (@arivalayam) January 1, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024