சிலிண்டர் விலை ரூ.500 குறைக்கப்படும்… தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக!

DMK election manifesto

DMK : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கனிமொழி தலைமையிலான குழு தயார் செய்த திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

இதன்பின் முதலமைச்சர் கூறியதாவது, சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது உறுதிமொழி மட்டுமல்ல, வழிகாட்டும் நெறிமுறையாகும். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான குழு தேர்தல் திமுக அறிக்கையை தயாரித்துள்ளது. இதனால், இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது என்றார்.

Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தியது பாஜக அரசு. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றவில்லை. தன் கையில் கிடைத்த அதிகாரத்தை பாஜக அரசு வீணடித்துவிட்டது. இந்தியாவின் கட்டமைப்புகள் அனைத்தையும் சிறுக சிறுக பாஜக சிதைத்துவிட்டது, பாஜகவை வீழ்த்த தான் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது என்றும் இனியும் மோடி ஆட்சி தொடர்பது நாட்டுக்கு நல்லது அல்ல என கூறி, திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் அறிவித்தார்.

Read More – ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..

திமுக தேர்தல் அறிக்கை:

  • மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.
  • மாநில முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின்னரே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  • ஆளுநர்களூக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
  • உச்சநீதிமன்றம் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
  • மத்திய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும்.
  • ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.
  • நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
  • மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
  • தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
  • அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு சமமான நிதி வழங்கப்படும்.
  • சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும்.
  • இந்தியா முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
  • எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.500 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும், டீசல் விலை ரூ.65 ஆகவும் குறைக்கப்படும்.
  • நாடு முழுவதும் மாணவர்கள் கடன் ரத்து செய்யப்படும். மாணவர்களுக்கு வட்டி இல்லாமல் ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy