திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் திமுக எம்எல்ஏ சரணவனன் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது, மக்களை ஏமாற்ற கூடியது. ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொல்லிவிட்டு, ஒன்றும் தரவில்லை இப்பொது மக்களை ஏமாற்ற கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு ஆகியவை மீண்டும் அதிகரிக்கும் என எல் முருகன் விமர்சனம் செய்துள்ளார். ரூ.1,000 கொடுப்பதாக திமுக கூறினாலும் அதை செய்யமாட்டார்கள், அதிமுக சொன்னால் செய்வார்கள். திமுக அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை, அதற்கு மாறாக தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தொகுதியில் உள்ள நிர்வாகிகளிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை என்றும் அங்கீகாரமும், ஜனநாயகமும் கிடைக்கும் இடம் என்பதால் பாஜகவில் இணைந்தேன் எனவும் பாஜகவின் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…