சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்…. திமுக சார்பில் தேர்தல் பணி குழு அறிவிப்பு!

anna arivalayam

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுபோன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டிஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி மற்றும் ஆ.ராசா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு அறிவிப்பு!

அதேபோல், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், டிகேஎஸ் இளங்கோவன், ஏகேஎஸ் விஜயன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, செழியன், ராஜேஷ்குமார் எம்பி, எழிலரசன், அப்துல்லா எம்பி, எழிலன் நாகநாதன் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழுவை அக்கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் பா.சிதம்பரம் உள்ளிட்ட 35 பேர் இடம் பிடித்திருந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்