இன்று மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

Default Image

இன்று மாலை 5 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான, உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது. அதற்கான தயாரிப்பு கூட்டம் இன்று நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க.மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25-06-2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும் என்றும், அக்கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை கூட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்