நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு
நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் அக்.1-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.