திமுக 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் நிலையில் பிப்ரவரி 17-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது .அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும்.இதற்கு பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 17-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டம் உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…