#BREAKING: 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை.. துரைமுருகன் அறிவிப்பு

Default Image

வரும் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில்  சட்டமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-12-2020 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

அதுபோது மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்