திமுக தவறான கருத்துகளை பரப்புகிறது – அமைச்சர் பாண்டியராஜன் குற்றச்சாட்டு.!
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மாஃபா பாண்டியராஜன், இந்து கோயில்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும் என்று தெரிவித்தார். ஆனால், ஸ்டாலினுக்கு புராதனச் சின்னங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. பல மாநில அரசுகள் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவில்லை என்ற காரணத்தால் மத்திய அரசு அதை பாதுகாக்கவுள்ளதாக மத்திய அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தாா்.
மேலும் தமிழகத்தில் பழமை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் உள்ளதாக மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா். இந்தக் கோயில்களை மத்திய அரசு எடுப்பதாக அவா் தெரிவிக்கவில்லை என்று பாண்டியராஜன் குறிப்பிட்டார். தொல்லியல் துறை எந்தக் கோயிலையும் நடத்தவில்லை. அதிமுக அரசில் கோயில்கள் பாதுகாப்பாகவே உள்ளன என்றாா் அமைச்சா். இதையடுத்து தமிழக கோவில்களை மத்திய தொல்லியல் துறைக்கு அளிப்பதாக திமுக தான் தவறான கருத்துகளை பரப்பி வருகிறது என்று குற்றம்சாட்டினார்.