இந்த மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று எப்போதும் சொன்னது கிடையாது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
நடிகர் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா என்ற திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அதற்கான உரிமையை பெற்று வெளியிடுகிறது.
இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில், இந்தி திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதுகுறித்து சர்ச்சையான கருத்துக்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவர், இந்தி எதிர்ப்பை பதிவு செய்யும் தமிழகத்தில் இந்தி படத்தை வெளியிடுவதால் வரும் எதிர் கருத்துக்களை எப்படி எதிர்கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார் .
அதற்கு உதயநிதி ஸ்டாலின் எப்போதும் இந்தி தெரியாத போடா என்பது இந்தி திணிப்புக்கு எதிரானது தான். இந்த மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று எப்போதும் சொன்னது கிடையாது. உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் கற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று யாராவது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை என பேட்டி அளித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…