திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தும் நோக்கத்தில் திமுக வழக்கு தொடரவில்லை..! திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சரவணன் தகவல்
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தும் நோக்கத்தில் திமுக வழக்கு தொடரவில்லை என்று திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் கூறுகையில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தும் நோக்கத்தில் திமுக வழக்கு தொடரவில்லை.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் சின்னம் ஒதுக்கீடு படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகையில் முறைகேடு நடந்தது தொடர்பாக தான் 2 வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது என்று திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.