டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாகப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே குரூப் 4 , குரூப் 2ஏ தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே திமுகக் கோரிக்கை வைத்து உள்ளது.
இந்தக் கோரிக்கையைச் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி.நடத்திய குருப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி.நடத்திய விசாரணையில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்தது.
பின்னர் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை செய்ததில் இடைத்தரகர், தேர்வர்கள் என 16 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது.முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…