திமுக ஆட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்!
இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என திமுக கவுன்சிலர் விமர்சனம்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன், பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசியதால், திமுக ஒன்றிய குழு தலைவர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மதிப்பதே இல்லை, மரியாதை குறைவாக நடத்துவதாக தெரிவித்துள்ளார். தனது மனைவியே உங்கள் ஆட்சியில் இப்படி தான் மரியாதை குறைவாக நடத்துவீர்களா என கேட்டதாகவும், இதனால் முதலமைச்சருக்கு அவப்பெயர் ஏற்படும் எனவும் தெரிவித்தாகவும் கவுன்சிலர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
மேலும், திருபுவனம் ஒன்றிய டிப்போ பேருந்து ஓட்டுநர்கள், பெண்கள் பேருந்தில் ஏற நிற்கும்போது பேருந்தை தள்ளி நிறுத்துவதாகவும் குற்றசாட்டினார். இதுபோன்ற செயல் பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றும் தனக்கும் மன உளைச்சலாக உள்ளது எனவும் திமுக ஆட்சியை வருத்தத்துடன் விமர்சித்துள்ளார்.