திமுக கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக வழக்கு ..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
- கடத்தப்பட்ட முதுகுளத்தூர் 8வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து தந்தை மீட்டுத்தருமாறு காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் கடந்த ஆறாம் தேதி என் தந்தையை பொறுப்பேற்க செய்தனர். அப்போது என் தந்தையை பார்க்க முயன்றபோது அவர்கள் தடுத்து விட்டனர். எனவே எனது தந்தையை மீட்டுத் தருமாறு அவர் அந்தப் புகாரில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ராஜா , புகழேந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் “சாத்தையா சட்டவிரோதமாக யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் தந்தையை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.காவல்துறை தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் இது தொடர்பான அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தார்.