திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம்.!
புதிய திமுக நிர்வாகிகளோடு முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அமைச்சர் துரைமுருகன், எம்பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர்.
புதிய நிர்வாகிகளுடன் முதன் முதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர், பொருளார், துணை பொதுச்செயலாளர்கள் , முக்கிய நிர்வாகிகள் , மாவட்ட செயலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
72 துவட்ட செயலர்களில், 2 பேர் வரவில்லை , ஒருவர் அமைச்சர் ரகுபதி. அவர் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். இன்னொருவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் . அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கிறார் .
இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் டிசம்பர் 19ஆம் தேதி மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனை, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றிய ஆலோசனை. பூத் கமிட்டிநிர்வகிப்பது. திமுக இணையவழி செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.