திமுகவால் மின்தட்டுப்பாட்டை போக்க முடியவில்லை-பன்னீர்செல்வம்

Default Image

பணப்பட்டுவாடா  புகார் காரணமாக ஓத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி தேர்தல்  நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுகவினர்  பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வேலூரில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுகவால் மின்தட்டுப்பாட்டை போக்க முடியவில்லை, அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது .100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் அதிமுக அரசு நிறுத்தாது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்