மக்களவை தேர்தல் : திமுக தொடர்ந்து முன்னிலை
இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை,ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை,பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலை,திருச்சி மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை,காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் முன்னிலை,சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் முன்னிலை,தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுகவின் தனுஷ் எம்.குமார் முன்னிலை,மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை,நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.