விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு ஆதரவு ! வைகோ அறிவிப்பு
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மேலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.