திமுக – காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி- பன்னீர்செல்வம்
- திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- திமுக – காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி என்று துணை முதலைமச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் கூறுகையில்,அதிமுக தொண்டர்களின் கட்சி. அதிமுகவில் தொண்டர்களை முதல்வராக மாற்ற முடியும் .திமுகவில் ஒரு தொண்டர் தலைவரோ, முதல்வரோ ஆக முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுக – காங்கிரஸ் கொள்கை இல்லாத, சந்தர்ப்பவாத கூட்டணி.
வானில் இருந்து ஜெயலலிதா நம்மை கூர்ந்து கவனித்து வருகிறார். தமது பிறந்த நாளின் போது ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் வழங்கும் நலத்திட்ட உதவிகளை கவனித்து வருகிறார் ஜெயலலிதா என்று துணை முதலைமச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.