தொகுதி பங்கீடு: திமுக, காங்கிரஸ் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை…!

dmk, Congress

நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை: சீமான் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை குறித்து இந்த முதற்கட்டமாக பேச்சுவார்த்தையில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது என  கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தேனியை தவிர மற்ற 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இன்றைய பேச்சுவார்த்தையில் புதுச்சேரி உட்பட மொத்தம் 12 தொகுதிகள் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீடு குழுவை காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்