திமுக-காங்கிரஸ் கூட்டணி!!காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு !!
- இன்று திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- இன்று திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- மக்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்தனர். சென்னை ஹோட்டலில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் ஆலோசனை செய்தனர்.
அதேபோல் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் வந்தனர்.
இதன் பின்னர் திமுக-காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதன் பின் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.