திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது -பிரதமர் மோடி பேச்சு
தமிழகம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்தாண்டு தமிழகம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறது. வளர்ச்சிக்கு எதிரானவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என இந்திய மக்கள் விரும்புகின்றனர்.
மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளன.சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி என்பது கருணை மிகுந்த ஆட்சியாகும்.ஆனால், எதிர்க்கட்சிகள் கருணையற்ற ஆட்சியை நடத்தவே விரும்புகின்றனர்.ஊழல் செய்வதற்கு மட்டுமே திமுகவினர் தங்களது மூளையை பயன்படுத்துகின்றனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய மின்வெட்டை நீங்கள் மறக்க மாட்டீர்கள்.திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது. சட்டை பையை நிரப்பி கொள்ளவே, திமுக – காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.