அதிமுகவில் இணைந்த திமுக சேர்மேன்..!
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் திமுக சேர்மன் அதிமுகவில் இணைந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி திமுக சேர்மன் சகுந்தலா மற்றும் அவரது மகனும் மதுரை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய் உள்ளிட்டரும் அதிமுகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் திமுக சேர்மன் சகுந்தலா தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். திமுக சேர்மன் சகுந்தலா தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் அதிமுகவில் இணைந்தார். திமுகவில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தான் அதிமுகவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இராமலிங்கம் பிள்ளை , வீரமாமுனிவரின் சிலையை திறந்து வைத்த -முதல்வர் ..!
இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் இருந்து அமமுக மற்றும் பாஜகவை சார்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.