“அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் திமுக” – ஈபிஎஸ் கண்டனம்!

Default Image

அடுத்தவர் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல் சொந்த செயல் திட்டங்களை திமுக வகுத்து செயல்படுத்த வேண்டும் என ஈபிஎஸ் அறிக்கை.

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரி உட்பட அதிமுகவின் சாதனைகளை தான் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்ட திமுக முயற்சி செய்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தென்றலும், வாடைக் காற்றும் வீசும் போது, இடை இடையே தோன்றும் அனல் காற்று போல, அவ்வப்போது சந்தர்ப்பவசத்தால் அமைந்த திமுக பொய், பித்தலாட்டங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தைகளை தங்களுடையது என்று, எங்கும் எதிலும் விளம்பரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட இப்போதுள்ள இந்த விடியா அரசைக் கண்டு மக்கள் விலா நோக சிரிக்கிறார்கள். உதாரணமாக, OBC-க்கு மருத்துவ மேற்படிப்பில் 27% ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். முதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தான் வழக்கு தொடுத்தது.

இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில், தாங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் திமுக-வும், பா.ம.க-வும் பின் யோசனையுடன் தங்களை இணைத்துக்கொண்டன. அதிமுக ஆட்சியில் தான் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் 1450 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அரசு பள்ளி மாணாக்கர்களுக்காக, அதிமுக அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக, சுமார் 109 ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற உள்ளது.

நாளை பிரதமர் மோடி தமிழகத்தில் இந்த 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் காணொளி மூலம் திறந்துவைக்க உள்ளார் என்ற செய்தி அறிந்து உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவின் அரசு கோரிக்கை வைத்தவுடன், தமிழ் நாட்டிற்கு மருத்துவ கல்லூரிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு அனுமதியும், 11 மத்திய அரசின் பங்கையும் வழங்கிய பிரதமருக்கு தமிழ் நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை இந்த விடியா அரசு, தான் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன்.

இனியாவது இந்த விடியா அரசு “அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல்”, எதையும் தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பரப்படுத்தும் மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு தனது சொந்த செயல் திட்டங்களை வகுத்து, அவற்றினை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer
prison break rashid khan
Rahul gandhi - Thirumavalavan - Arvind Kejriwal
Erode East By Election - VC Chandrakumar - Seethalakshmi
Delhi election result 2025 - Rahul gandhi - Devender Yadav
Gold Rate