67 கிலோ கேக் வெட்டி 67வது பிறந்தாளை கொண்டாடிய திமுகவினர்.!

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் திமுகவை சேர்ந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கேக் வெட்டியும், அன்னதானம் அளித்தும் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கரூரில் 67 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் கொண்டாடினர். மேலும் கரூர் மாவட்டம் முழுவதும் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதன் தொடக்க விழாவாக இன்று காலை திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவும் ஆன செந்தில் பாலாஜி கேக் வெட்டப்பட்டது. மேலும் கரூர் முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சிகளும் இன்று நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்