தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள் நேரடியாக பொதுமக்களுக்கு உதவிகளை மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த நேரத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி நோய் தொற்றுக்கு வழி வகுப்பது தவிர்க்க வேண்டும்.
மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் , மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.எனவே பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதன் பின் தன்னார்வலர்கள் உதவ தடை விதிக்கப்படவில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து உதவிகளை செய்யுங்கள் என்றே அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…