கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியையும் திமுகவினர் கைப்பற்றினர்.
தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைப்பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி கனியை பறித்துள்ளது.
இந்நிலையில், கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சிவகாமசுந்தரி, குளித்தலை தொகுதியில் மாணிக்கம் ஆகியோர் தி.மு.க சார்பில் போட்டியிட்டனர். இதனையடுத்து, இந்த 4 தொகுதிகளிலும் திமுகவினர் வெற்றி பெற்று கரூர் முழுவதையும் கைப்பற்றி உள்ளனர்.
இதுகுறித்து கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறுகையில், ‘மக்கள் மகத்தான வெற்றியை திமுகவிற்கு வழங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் அளித்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முத்தமிழறிஞர் கலைஞரின் பொற்கால ஆட்சியை தமிழகத்துக்கு வழங்குவோம்’ என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…