தமிழக தேத்தல் களம் அடுத்த கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகர தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுக பிரச்சாரத்தில் அணல் காற்று வீசத்தொடங்கியுள்ளது.இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்;
முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் எது எதையோ வாய்க்கு வந்தபடி புலம்புகிறார்.திமுகவை வீழ்த்துவதற்கு என்னையே பலியிட தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.அதை நான் பாராட்டுகிறேன் என்றார்.
பழனிசாமி அவர்களே திமுகவை அழிக்க போகிறேன் என்று கூறியுள்ளீர்கள். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழித்து போனார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது.திமுகவை வீழ்த்தவும் முடியாது அதை நினைத்து பார்க்கவும் முடியாது.திமுகவை வீழ்த்த ஒருவன் பிறக்கவில்லை, இனி பிறக்கவும் முடியாது.
அண்ணா காலத்திலிருந்து பார்க்கிறோம் திமுகவை வீழ்த்த பலர் கிளம்பினர்.திமுக வுக்கு எதிர்ப்பு வளரவளரதான் திமுக வளரும். இதை பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்.
மத்தியிலும் மாநிலத்திலும் நாம் ஆட்சியில் இல்லை ஆனால் நம்மை வீழ்த்த இத்தனை பேர் கிளம்பியுள்ளனர் என்றால் நம் சக்தி என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் இல்லாததால் திமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைக்கின்றனர். கலைஞர் இல்லாவிட்டாலும் கலைஞரால் உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் இந்த இயக்கத்தில் உள்ளனர் மறந்துவிடாதீர்கள். கலைஞர் இன்னும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டு, பயத்தில் ‘உயிரை விடுவேன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் திரு.பழனிசாமி. அவர் பல்லாண்டு வாழ வேண்டும்; ஆட்சி கிடைத்தால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை, திமுக ஆட்சி செயலில் காட்டுவதை அவர் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…