திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கு ஜூலை 1-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். ஜூலை 8-ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வேரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகிறார் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.