திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 37,901 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது.தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றது.
இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 22 சட்டமன்றத் தொகுதியில் திமுக 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 37,901 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.