மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா!
தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சென்னை சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு அளித்தார் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் செப். 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுக எம்பி முகமது ஜான் 2021 மார்ச் 23-ஆம் காலமானதை அடுத்து அந்த இடம் காலியாக இருந்தது. தற்போது அந்த இடத்துக்கும் நடக்கும் தேர்தலில் திமுக வேட்பாளராக அப்துல்லா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை செப்டம்பர் 1ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.