விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.!

Vikkiravandi By Election - DMK Candidate Anniyur Raja (Right side) Nomination

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்தார். அதனை அடுத்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10இல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஜூலை 13இல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி துவங்கியது. இதுவரை 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுத்தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரி சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை அளித்தார். உடன் அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி ஜெகத்ரட்சகன், விசிக எம்பி ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்