திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வரும் 6ஆம் தேதி வருமாறு தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனுக்கு திமுக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இழுபறியில் உள்ள கட்சிகள் :
இன்று மட்டும் திமுக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,விசிக ,இந்திய கம்யூனிஸ்ட் ,மதிமுக வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் விசிக உடன் 6 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மதிமுக உடன் இரண்டாம் கட்டம் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ நாளை தொகுதி பங்கீடு குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்தனர்.கொங்குநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் உடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
திமுகவுடன் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்பட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்த தொகுதி பங்கீடுகள் :
திமுக கூட்டணியில் இது வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -3,மனிதநேய மக்கள் கட்சிக்கு -2,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு -6 தொகுதிகளும் மொத்தமாக இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…