திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது. இப்போது வைக்கப்பட்டுள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம். இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,கூட்டணிகள் மாறும், அது எப்படி மாறும் என்பது உள்ளது அல்லவா. காங்கிரசும் – பாஜகவும் கூட்டணி வைத்து சந்திக்குமா? என்று கேள்வி எழுப்பினார் .தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் திமுக கூட்டணியில் வரலாம்.மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜகவை நாங்கள் எதிர்த்து வருகிறோம். அதனால் திமுக- பாஜக கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…