காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாதது திமுகவின் பழிவாங்கல் நடவடிக்கையா?!

Default Image
  • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் எதிர்க்கட்சி கூட்டத்தொடர் நடைபெற்றது. 
  • அதில் கூட்டணி கட்சியான திமுக கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. 

தேசிய குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் அனைத்து எதிர்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, பகுஜன் சமாஜ் ஆகிய காட்சிகள் கலந்துகொள்வதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத்பவார் கலந்துகொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டணி கட்சியான திமுக இதில் கலந்துகொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலும் திமுக கலந்துகொண்டுள்ளது. அப்படி இருக்க இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே ஏற்பட்ட சிறிய மனக்கசப்பு விஷயங்களே இந்த காங்கிரஸ் கூட்டத்தில் திமுக பங்கேற்காததற்கு கரணம் என சிலர் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay
arjun tendulkar AND yograj
DhonI - fast stumpings