மக்களவை தேர்தல்..! திமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு
DMK: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றது. மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான படிவம் கடந்த பிப்ரவரி 19 முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது.
பின்னர், கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திமுக சார்பில் மக்க்ளவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுவை பூர்த்தி செய்து படிவத்துடன், ரூ.50 ஆயிரம் கட்டணத்தைச் செலுத்தி தலைமை அலுவலகத்தில் வழங்கி வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
Read More – எங்களுக்கு இப்படிப்பட்ட அரசு தான் வேணும்… கோரிக்கை வைத்த முதல்வர்.!
கடைசி நாளான இன்று மட்டும் 335 விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 2984 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, திமுக சார்பில் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை இன்று வழங்கினர்.