கஜா புயலுக்கு திமுக அறிவித்த ரூ.1 கோடி …!முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கும் திமுக பொருளாளர் துரைமுருகன்…!

Default Image

திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க உள்ளார்.

தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள  மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் சேதங்கள் பல ஆகும்.

இந்நிலையில்  திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும்.அதேபோல்  நிவாரண நிதியாக திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் 1 மாத ஊதியமும் அளிக்கப்படும் என்றும்  தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத்தை முதலமைச்சரிடம் வழங்க உள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்