மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்தது.இதனால் இந்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு வடமாநிலங்களில் ஒன்றான அசாமில் கடுமையாக கிளம்பியது.அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தது.பாதுகாப்புக்காக அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் விரோத #CAB2019 வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது. பாஜக அரசின் சிறுபான்மையினர் – தமிழர் விரோத செயல்களுக்கு ஆதரவளிக்கும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, 17-12-2019 அன்று மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் .
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…