குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு – ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலிலும் நிறைவேற்றப்பட்டது.
- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்தது.இதனால் இந்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு வடமாநிலங்களில் ஒன்றான அசாமில் கடுமையாக கிளம்பியது.அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தது.பாதுகாப்புக்காக அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
‘கழக தலைவர் @mkstalin அவர்கள் போராட்ட அறிவிப்பு’
சிறுபான்மையினர் – ஈழத்தமிழர்க்கு துரோகமிழைத்த பாஜக – அதிமுக அரசுகளைக் கண்டித்து, திமுக சார்பில் 17-12- 2019 அன்று மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.#CAB2019 #DMK pic.twitter.com/i6qE7enacu
— DMK (@arivalayam) December 12, 2019
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் விரோத #CAB2019 வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது. பாஜக அரசின் சிறுபான்மையினர் – தமிழர் விரோத செயல்களுக்கு ஆதரவளிக்கும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, 17-12-2019 அன்று மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)