திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் ஸ்டாலின்!!
- தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியானது.இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- மத்திய சென்னை – தயாநிதி மாறன்
- வடசென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி (ஆற்காடு வீராசாமியின் மகன்)
- தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
- ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
- காஞ்சிபுரம் (தனி) – செல்வம்
- அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
- வேலூர் – கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
- தருமபுரி – செந்தில் குமார்
- திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை
- கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)
- நீலகிரி (தனி)- ஆ.ராசா
- பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
- திண்டுக்கல் – வேலுச்சாமி
- கடலூர் – கதிரவன் (எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன்)
- மயிலாடுதுறை – ராமலிங்கம்
- தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
- சேலம் – பார்த்திபன்
- தூத்துக்குடி – கனிமொழி
- தென்காசி (தனி) – தனுஷ்குமார்
- திருநெல்வேலி-ஞான திரவியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.