தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு காதி மற்றும் தொழில் வாரிய துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

tn govt

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம தொழில்கள் துறையை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றி, வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் துறையையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும்,  4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், விழுப்புரம், ஈரோடு மாவட்டங்கள் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகள் என பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் செயல்பட்டுவந்த நிலையில், தற்போது மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யபட்டுள்ளனர்.

திருப்பூரில் வடக்கு, தெற்கு பிரிவுகளுடன் கிழக்கு – மேற்கு என இரு பிரிவுகள் கூடுதலாக அமைக்கப்பட்டு, அதற்கும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு, தெற்கு, மாநகர் என மூன்றாக இருந்த மதுரை மாவட்டம், வடக்கு மற்றும் மாநகர் என இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் மாற்றம்

பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாக்கா, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாக்காவையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக புதிய பொறுப்பாளர்கள்

  • ஈரோடு தெற்கு – அமைச்சர் முத்துசாமி
  • ஈரோடு வடக்கு – என்.நல்லசிவம்
  • ஈரோடு மத்தி – தோப்பு வெங்கடாசலம்
  • திருப்பூர் கிழக்கு – க.செல்வராஜ்
  • திருப்பூர் மேற்கு – அமைச்சர் சாமிநாதன்
  • திருப்பூர் வடக்கு – என்.தினேஷ் குமார்
  • திருப்பூர் தெற்கு – இல. பத்மநாபன்
  • விழுப்புரம் வடக்கு – செஞ்சி மஸ்தான்
  • விழுப்புரம் தெற்கு – கெளதம சிகாமணி
  • விழுப்புரம் மத்தி – ஆர்.லட்சுமணன்
  • மதுரை வடக்கு – அமைச்சர் மூர்த்தி
  • மதுரை மாநகர் – கோ.தளபதி
  • தஞ்சாவூர் தெற்கு – பழனிவேல்
  • திருநெல்வேலி மத்தி – அப்துல் வகாப்
  • திருவள்ளூர் கிழக்கு – எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்
  • நீலகிரி – கே.எம்.ராஜு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்