துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாகவும், அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாகவும் வைத்திருக்கிறது திமுக – அண்ணாமலை
துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாகவும், அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாகவும் வைத்திருக்கிறது திமுக என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தநிலையில், இந்த மசோதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாகவும், அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாகவும் வைத்திருக்கிறது திமுக.
ஆளுநரே எந்த துணை வேந்தர்களையும் நேராக நியமனம் செய்யவில்லை, தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் நடைபெறுகிறது; இதில் மாநில அரசின் தலையீடும் உள்ளது, திமுக அரசியல் காழ்புணர்ச்சியுடன் இதை நடைமுறை செய்கிறது