செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக – அண்ணாமலை
செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக என அண்ணாமலை ட்வீட்.
தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், பிரதமருக்கு முதல்வர் இக்கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017லிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதனால் மின் விநியோகம் தடைப்பட்டதாக தங்களது குடும்ப நாளிதழின் மூலம் கூறுவது சுத்தப் பொய். TTPSஇல் ஏப்ரல் 20ஆம் தேதி அன்று 5 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருந்தது; பற்றாக்குறை எங்கே?
ஏப்ரல் 20ஆம் தேதி அன்று ஒரே நாளில் 4 யூனிட்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டது.
ஆலையை 5 நாட்களுக்கு இயக்க போதுமான நிலக்கரி கையிருப்பிலிருந்த நிலையில், TTPSல் உள்ள 3 யூனிட்கள் ஒரே நாளில் நிறுத்தப்பட்டதன் காரணத்தை முதல்வர் விளக்குவார் என்று நம்புவோமாக.
— K.Annamalai (@annamalai_k) April 22, 2022