திமுக மீது புகார் குண்டு மழை பொழிந்து அறிக்கையில் பொறிந்து தள்ளிய காங்.தலைவர்..பகீரங்க அறிக்கை
- திமுக -காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதா..?
- உள்ளாட்சியில் திமுக எங்களை புறக்கணித்தது என்று காங்.தலைவர் பகிரங்க அறிக்கை
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அதிக இடங்களை பிடித்த நிலையில் அதிமுக கூட்டணி சொல்லும் படியான வெற்றியை உறுதி செய்தது.இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு கூட்டணிக்குள் குழப்பம் உள்ளது என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்.கே.எஸ் அழகிரி வெளியிட்ட அந்த அறிக்கையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளில் காங்கிரஸ் போட்டியிட திமுக எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை.திமுக தலைமையின் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்க எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.மேலும் 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் 2 இடங்கள் மட்டும் திமுகவினால் வழங்கப் பட்டுள்ளது. மேலும் திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை என்று தனது அறிக்கை மூலமாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.இந்த அறிக்கையை அரசியல் நோக்கர்கள் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் தென்படுவதாக தெரிவித்துள்ளனர்.